ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட பின்னரும் தான் நடித்த பான் மசாலா விளம்பரம் ஒளிபரப்பப்படுவதால் அந்த நிறுவனத்திற்கு நடிகர் அமிதாப் பச்சன் நோட்டீஸ்!

0 4059

ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட பின்னரும் தான் நடித்த பான் மசாலா விளம்பரம் ஒளிபரப்பப்படுவதால் அந்த நிறுவனத்திற்கு நடிகர் அமிதாப் பச்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இளைஞர்கள் புகையிலைக்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில், பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்த வேண்டும் என தேசிய புகையிலை எதிர்ப்பு அமைப்பினர் அமிதாப்புக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனால் தான் ஏற்கனவே நடித்த பான் மசாலா விளம்பரத்தை நிறுத்துமாறு கமலா பசந்த் நிறுவனத்தை அவர் கேட்டிருந்தார். ஆனால் அமிதாப் நடித்த விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பப்படுவதால் கமலா பசந்த் நிறுவனத்திற்கு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments