பிரபல பிராண்ட் பெயரில் போலி.. காலில் விழுந்து கெஞ்சிய வட மாநில இளைஞன்..!

0 19132
பிரபல பிராண்ட் பெயரில் போலி.. காலில் விழுந்து கெஞ்சிய வட மாநில இளைஞன்..!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் பிரபல நிறுவனங்கள் பெயரிலான போலியான புளூடூத் ஹெட்செட்டுகள், பவர் பேங்க்குகளை தெருவில் கூவிக் கூவி விற்பனை செய்த வடமாநில இளைஞன், தன்னை மடக்கிப் பிடித்த செல்போன் கடை உரிமையாளர்கள் கால்களிலும் போலீசார் கால்களிலும் விழுந்து தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியதை அடுத்து, அவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

பிரபல நிறுவனங்களான விவோ, ஓப்போ, போட் போன்ற நிறுவனங்களின் ஹெட்செட்டுகள், பவர் பேங்க்குகள், சுமார் ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை விலை பெறும். இந்த நிலையில், கோபிச் செட்டிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலிவு விலைக்கு அவை விற்கப்படுவதாக சிலர் செல்போன் கடை உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

போலியான பொருட்களால் அவர்களது விற்பனை பாதிக்கப்பட்டதோடு, வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கோபி - மொடச்சூர் சாலையில் வடமாநில இளைஞன் ஒருவன் போலி ஹெட்செட்டுகள், பவர் பேங்க்குகளை விற்பனை செய்வது தெரியவந்து, அவனை செல்போன் கடை உரிமையாளர்கள் மடக்கிப் பிடித்தனர்.

உடனடியாக போலீசுக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். போலீசிடம் சொல்ல வேண்டாம் என செல்போன் கடை உரிமையாளர்களின் காலில் விழுந்து கெஞ்சிய அந்த ஆசாமி, தோப்புக்கரணம் போட்டும் மன்னிப்புக் கோரினான். தகவலறிந்து வந்த காவலரின் கால்களிலும் விழுந்து தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சிய அந்த நபரை கடுமையாக எச்சரித்து, விரட்டிவிட்டனர்.

விசாரணையில் மகாராஷ்டிராவில் இருந்து கும்பலாக வந்திறங்கி, இங்கு பிரபல நிறுவனங்களின் பெயரிலான போலியான மின்னணு சாதனங்களை அவர்கள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments