சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளியின் கையை துண்டாக்கிய கொடூரம் ; 3 பேர் கைது

0 4482
சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளியின் கையை துண்டாக்கிய கொடூரம்

சம்பள பாக்கியை கேட்ட தொழிலாளியின் கையை துண்டாக்கிய சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இருக்கும் டோல்மாவு என்ற கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

அசோக் சாகெத் என்ற தொழிலாளி கணேஷ் மிஸ்ரா என்பவரிடம் கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தமக்கு வர வேண்டிய சம்பள பாக்கியை வாங்க வேறு ஒருவருடன் அந்த தொழிலாளி சென்றுள்ளார்.

அப்போது இரு தரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மிஸ்ராவும் அவருடன் இருந்தவர்களும் ஆயுதம் ஒன்றால் அசோக் சாகத்தின் கையை வெட்டியதாக சொல்லப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தொழிலாளியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, துண்டான கையையும் மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர்.

துண்டான கைது தையலிடப்பட்டு, சேர்க்கப்பட்டாலும், அதிக ரத்த காரணமாக தொழிலாளியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என போலீசார் தெரிவித்தனர். கணேஷ் மிஸ்ரா மற்றும் அவரது 2 சகோதரர்களை கைது செய்த போலீசார் கொலை முயற்சி மற்றும் சமூக வன்கொடுமை பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments