மேய்ச்சலுக்குச் சென்ற இடத்தில் கன்று குட்டி ஈன்ற எருமை ; கன்று குட்டியை பைக்கில் எடுத்துச் சென்ற உரிமையாளரை பின் தொடர்ந்து ஓடிய தாய் எருமை
சென்னை போரூரில் மேய்ச்சலுக்குச் சென்ற எருமை கன்று குட்டி ஈன்ற நிலையில், கன்று குட்டியை அதன் உரிமையாளர் பைக்கில் வைத்து சாலையில் எடுத்துச்செல்லும் போது, குட்டியின் தாய் பின்தொடர்ந்து வெகு தூரம் ஓடிச் சென்றது.
போரூர் ஆர்.ஈ நகர் பகுதியில் பால் வியாபரம் செய்யும் பிரசாந்த் மோகன் என்பவர் காரம்பாக்கம் பகுதியில் தன் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். மேய்ச்சலுக்குச் சென்ற இடத்தில் அவரது ஒரு எருமை கன்று ஈன்றதாக அவருக்கு தெரிந்தவர்கள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து எருமை இருந்த இடத்துக்கு சென்ற அவர், கன்று குட்டியை பைக்கில் வைத்து எடுத்து வந்தார். அப்போது தன் குட்டியை சிறிது நேரம் கூட பிரிய மனமில்லாத தாய் எருமை, சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பைக்கை பின்தொடர்ந்து சென்றது.
Comments