வரும் 30ஆம் தேதி முதல் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு அனுமதி ; கனடா அரசு
கனடா நாட்டில் வரும் 30ஆம் தேதி முதல் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியது.
இதனை அடுத்து, கோவேக்சின் தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் வர பல நாடுகள் அனுமதி அளித்து வருகின்றன. இந்நிலையில் கோவேக்சின், சீனாவின் சினோவேக், சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தியவர்கள் தங்கள் நாட்டிற்குள் வரலாம் என கனடா அறிவித்துள்ளது.
இதுவரை ஃபைசர், மாடெர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் ஆஸ்ட்ரஜெனகா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே கனடாவில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
Comments