ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு

0 4953
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களாக உள்ள அசோக் கெலாட்டிற்கும், சச்சின் பைலட்டிற்கும் இடையே அதிகார மோதல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சரவையை மாற்றியமைக்க ஏதுவாக நேற்று அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனை அடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள ராஜ் பவனில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

3 பெண்கள் உள்பட மொத்தம் 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், அதில் 4 பேர் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments