நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் நிர்வகிக்க நடவடிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் வகையில், அவற்றை டிஜிட்டல் முறையில் நிர்வகிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில், பல இடங்களில் குளங்கள், கால்வாய்கள், ஆறுகள் போன்றவை உடைந்து, மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நீர்நிலைகளை பாதுகாக்க தவறியதும், நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுமே, இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டுக் கொண்டார்.
Comments