கனடாவில் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் பணிகள் தீவிரம்!
கனடாவில் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
கன மழையால் ஏராளமான சாலைகளும், ரயில் பாதைகளும் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உணவு பொருட்கள் எடுத்து செல்லும் ஹெலிகாப்டர்களை, ராணுவ வீரர்கள் ராட்சத விமானங்களில் ஏற்றி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
Comments