மீள முடியாத நஷ்டத்தில் இயங்கும் பி.எஸ்.என்.எல்... அந்நிறுவனங்களின் சொத்துக்களை விற்க மத்திய அரசு நடவடிக்கை!
நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய 70 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் மீள முடியாத நஷ்டத்தில் தொடர்ந்து இயங்கி வருவதால் அந்நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 6 சொத்துக்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசின் முதலீடு மற்றும் பொது சொத்துக்கள் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்நிறுவனக்களுக்கு சொந்தமாக உள்ள சொத்துக்கள் ஏலம் மூலம் விற்கப்பட உள்ளன.
இதற்கிடையே அடுத்த 4 ஆண்டுகளில் நஷ்டத்தில் இயங்கும் பல பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை விற்று 6 லட்சம் கோடி ரூபாய் வரை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Comments