கோவின் இணையதளத்தில் தனிநபர் தடுப்பூசி நிலவரம் குறித்து அறியும் வசதி... மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகம்

0 3441

கோவின் இணையதளத்தில் தனிநபர் ஒருவரின் தடுப்பூசி நிலவரம் குறித்து அறியும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பேசிய தேசிய சுகாதார ஆணைய தலைமை செயல் அதிகாரி ஆர்.எஸ்.சர்மா, கோவின் தளத்தில் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை கொண்டு ஒருவர் தடுப்பூசி போட்டுள்ளாரா? எத்தனை டோஸ் போட்டிருக்கிறார்? என்பன போன்ற விவரங்களை பெறலாம் என்றார்.

தற்போது பெரும்பாலான சேவைகளுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த புதிய வசதி பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் தடுப்பூசி நிலவரங்களை, பயண நிறுவனங்கள் தங்கள் பயணிகளின் தடுப்பூசி நிலவரங்களை இதன் மூலம் பரிசோதிக்க முடியும் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments