இம்ரான்கானை அண்ணன் என்று அழைத்த சித்துவுக்கு பாஜக கண்டனம்

0 4138

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் தனது அண்ணன் போன்றவர் என்று நவ்ஜோத் சித்து கூறியுள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு சென்ற மாநில காங்கிரஸ் தலைவர் சித்து அங்கு வழிபாடு நடத்தினார்.அவருக்கு பாகிஸ்தான் எல்லைக்குள் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் சார்பாக உயர் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வா சித்துவை ஆரத்தழுவி வரவேற்றார். குருத்வாராவில் வழிபட்ட பின் சித்து அளித்த பேட்டியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனக்கு அண்ணன் போன்றவர், என்று கூறியது கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில் இம்ரான் கான் டிரோன் மூலம் தீவிரவாதிகளுக்கு ஆயுதத்தையும், போதை பொருட்களையும் அனுப்புபவர்களுக்கு உதவுபவர் என்று பாஜக சாடியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments