இந்தூர் 5 வது ஆண்டாக இந்தியாவின் தூய்மையான நகரமாக தேர்வு

0 4499

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் 5 வது ஆண்டாக தொடர்ந்து இந்தியாவின் தூய்மையான நகரமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான விருதைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கிப் பாராட்டினார்.10 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை கொண்ட தூய்மையான பத்து நகரங்களின் பட்டியலில் இந்தூரை அடுத்து சூரத், விஜயவாடா, நவி மும்பை, புதுடெல்லி, திருப்பதி, புனே, ராய்புர், போபால், வடோதரா, விசாகப்பட்டினம் அகமதாபாத்,  ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

சட்டிஸ்கர் சுத்தமான மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கங்கைக் கரை நகரங்களில் வாரணாசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments