இந்தியாவின் அமைதிக்கு கேடு விளைவித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் ; அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

0 2676
இந்தியாவின் அமைதிக்கு கேடு விளைவித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்

இந்தியாவின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நினைக்கும் அண்டை நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய இந்தியா தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் ஷஹீத் சம்மான் யாத்ராவில் உரையாற்றிய அவர், தீவிரவாத தாக்குதல்கள் மூலம் இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

சீனாவை மறைமுகமாக சாடிய ராஜ்நாத் சிங், இந்தியாவில் இருந்து ஒரு இன்ச் நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்தாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார். கடந்த காலங்களை போல் அல்லாமல் புதிய இந்தியா மிகவும் வலிமை வாய்ந்ததாக உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments