பாலாற்று வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ; செவிலிமேடு பாலத்திலிருந்து சுமார் 5கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்
பாலாற்றில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு காஞ்சிபுரம் செவிலிமேட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜபாத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் மூழ்கியது அதேப்போல் உத்திரமேரூர் சாலையில் உள்ள இருவழிப்பாதையும் மூடப்பட்டது.
இதையடுத்து தென்மாவட்டங்களை நோக்கி பயணிக்கவேண்டிய வாகனங்கள் அனைத்தும் செவிலிமேடு பாலத்தையே பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும், பாலாற்றின் வெள்ளத்தை காண்பதற்காகவும் பொதுமக்கள் செவிலிமேடு பாலத்தில் குவிந்தனர்.
இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு செவிலிமேடு பாலத்திலிருந்து ஐயங்கார் கூட்ரோடு வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
Comments