வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய அமைப்பினர், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் விவசாய அமைப்பினர், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 3 வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்படும் என அறிவித்தார். இந்நிலையில், டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதியான சிங்குவில் 40 விவசாய சங்கங்கள் இணைந்த அமைப்பான, சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.
இதில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தொடர்பாகவும், அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்வரை போராட்டம் நீடிக்கும் என விவசாய சங்கங்கள் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments