கோவில் திருப்பணி என்ற பெயரில் போலி நோட்டீஸ் அச்சடித்து ஊர் ஊராக மோசடி ; கேரள ஆசாமிகளிடம் போலீசார் தீவிர விசாரணை
கன்னியாகுமரி மாவட்டத்தில், இல்லாத கோவிலுக்குத் திருப்பணி செய்வதாகக் கூறி, வசூல் வேட்டையில் ஈடுபட்ட கேரள ஆசாமிகளை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இரணியல் பகுதிக்கு சொகுசு காரில் வந்த 5 பேர், கேரளாவில் உள்ள கோவிலில் திருப்பணி நடைபெற இருப்பதாகக் கூறி வீடு வீடாக சென்று நன்கொடை வசூலித்தனர். இவர்கள் நடத்தையில் சந்தேகமடைந்த அப்பகுதி இளைஞர்கள் அவர்களை சுற்றி வளைத்து விசாரிக்க முற்பட்ட போது 3 பேர் காரில் ஏறி தப்பி சென்றனர்.
எஞ்சிய இருவரை பிடித்து விசாரித்த போது , அவர்கள் கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த பெர்னார்ட் மற்றும் கனேஷ் என்பதும், கோவில் திருப்பணிக்கு நன்கொடை என்ற பெயரில் போலி நோட்டீஸ் மற்றும் நன்கொடை ரசீது அச்சடித்து, ஊர் ஊராக சென்று நேரடியாகவும், கூகுள் பே மூலமாகவும் பணம் வசூலித்ததும் தெரியவந்தது.
Comments