ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி சான்று வாங்க வருபவர்களுக்கு தனி வார்டு அமைப்பது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
விபத்தில் சிக்கி மாற்றுத்திறனாளி சான்று வாங்க வருபவர்களுக்கு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைப்பது குறித்து பதில் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்டோ ஓட்டுனர் ஜெகதீசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், விபத்தில் பாதிக்கப்பட்ட தன்னை, 30 நாட்கள் மருத்துவமனையில் தங்கவைத்து, அதன் பின்னரே பாதிப்புக்கான சான்று அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இத்தகைய தாமதத்தை தவிர்க்க, மாற்றுத்திறனாளி சான்று பெறுபவர்களுக்கான தனி வார்டு உருவாக்க கோரியும், சான்று பெற காலக்கெடு நிர்ணயிக்க கோரியும் வழக்கு தொடர்ந்தார்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், தனி வார்டு அமைப்பது குறித்து 4 வாரத்தில் முடிவெடுத்து, ஜனவரி 7-ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும், என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார்.
Comments