இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் போது இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான நபரை விடுவித்தது நீதிமன்றம்
அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவர் சுட்டுகொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை கண்டித்து நூற்றுக்கணக்கானோர் பேரணி சென்றனர்.
டந்த ஆண்டு, கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் காவல் துறை அதிகாரியால் கொல்லப்பட்டதை கண்டித்து விஸ்கான்சின் (Wisconsin) மாநிலத்தில் வெடித்த போராட்டத்தின் போது, அங்குள்ள கார் ஷோரூமில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கைல் ரிட்டன்ஹவுஸ் (Kyle Rittenhouse) என்ற 18 வயது இளைஞர் தன்னைத் தாக்கிய இருவரை தானியங்கி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
தற்காப்பிற்காக அவர் துப்பாக்கி சூடு நடத்தியதால் நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்தத் தீர்ப்பை கண்டித்து நியூ யார்க் நகரில் இடதுசாரி ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்.
Comments