கர்நாடகாவில் கனமழை எதிரொலி ; கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரில் பொங்கி வழியும் நுரை
கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் நுரை பொங்குகிறது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து 3 ஆயிரத்து 60 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கலக்கும் கழிவுகளால் எற்பட்டுள்ள அதிகளவிலான நுரை கரையோரப் பகுதிகளில் பொங்கி வழிகிறது. இதனால் அணை அருகே உள்ள நந்திமங்கலம் செல்லும் தரைப்பாலம் முழுவதும் நுரையால் மூடப்பட்டுள்ளது.
Comments