பாலியல் புகார் - திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல்

0 3661
பாலியல் புகார் - திண்டுக்கல் அருகே தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல்

திண்டுக்கல் அருகே தனியார் கல்லூரி தாளாளர் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக கூறப்படும் விவகாரத்தில் கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது.

மாணவர் போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்த நிலையில், டிஐஜி விஜயகுமார் தலைமையில், அரசு அதிகாரிகள் அவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும்,  கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்தது போலவே,  தாளாளர் ஜோதி முருகனையும் கைது செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments