தடுப்பூசி ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு!
மாநிலங்களிடமும் யூனியன் பிரதேசங்களிடமும் 22 கோடிக்கும் அதிகமாக தடுப்பூசி டோசுகள் இருப்பு உள்ளதால், இனி தடுப்பூசி ஏற்றுமதியை வர்த்தக ரீதியில் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி பலமடங்கு அதிகரிக்கும் என்பதால் ஏற்றுமதி செய்வதை தவிர வேறு வழி இல்லை எனவும் சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
டிசம்பர் மாதம் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் உற்பத்தி 31 கோடி டோசுகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஸைகோவ்-டி தடுப்பூசி 2 கோடி டோசுகள் தயாராகும் எனவும் கூறப்படுகிறது.
பயாலாஜிகல்-இ நிறுவனத்தின் Corbevax தடுப்பூசியும் டிசம்பருக்குள் தயாராகி விடும் என கருதப்படுகிறது.
Comments