எல்லையை தாண்டி அமெரிக்காவுக்குள் நுழைய லாரிகளுக்குள் பயணித்த புலம்பெயர்ந்த மக்கள்
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் நோக்கில், இரு கன்டெய்னர் லாரிகளில் பயணித்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை, மெக்சிகோ அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
சுகாதாரமின்றி காணப்பட்ட அந்த லாரிகளுக்குள், குழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிகள் உட்பட ஏராளமானோர் முகக்கவசமும் அணியாமல் பயணித்துள்ளனர்.
இதில், பலருக்கு காய்ச்சல் இருப்பதை அறிந்த அதிகாரிகள், அவர்களின் விவரங்களை பதிவுசெய்துகொண்டு, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையும் அளிக்க ஏற்பாடு செய்தனர்.
கெளதமாலா, ஹோண்டுரஸ், எல் சால்வடார், ஹைதி, டொமினிக், பங்ளாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இவர்கள், மெக்சிகோவின் எல்லையைத் தாண்டி, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய திட்டமிட்டிருந்தனர்.
Comments