எரிபொருள் தொட்டியில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்... ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி குறித்து இஸ்ரோ அறிவிப்பு
எரிபொருள் தொட்டியில் ஏற்பட்ட அழுத்தமே ஜிஎஸ்எல்வி எஃப் 10 தோல்விக்கு காரணம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் இலக்கை எட்டாமல் தோல்வியடைந்தது. இதற்கு கிரையோஜெனிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்று கூறப்பட்டாலும் இஸ்ரோ நிறுவனம் தோல்வி குறித்து கருத்துக் கூறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் திரவ உந்து அமைப்பின் இயக்குநர் நாராயணன் பேசும்போது, ஜிஎஸ்எல்வி எஃப்-10 தோல்விக்கான காரணம், எல்எச்-2 டேங்க் அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடே என்று குறிப்பிட்டார்.
கடந்த 2010ம் ஆண்டுக்குப் பின்னர் ஜிஎஸ்எல்வி சந்திக்கும் மிகப் பெரிய தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments