ராஜஸ்தான் அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் மூன்று அமைச்சர்கள் ராஜினாமா

0 5049

ராஜஸ்தான் அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு இடம் அளிக்கும் வகையில் மூன்று அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

200 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் 30 அமைச்சர்கள் இடம்பெறலாம் என்ற போதும், தற்போது 20 அமைச்சர்களே உள்ளனர். காலியாக உள்ள இடங்களை தமது ஆதரவாளர்களுக்கு அளிக்கும்படியும் சில முக்கிய அமைச்சர்களை மாற்றும்படியும் சச்சின் பைலட் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் கோவிந்த் சிங், ரகு சர்மா, ஹரிஷ் சவுத்திரி ஆகிய மூன்று அமைச்சர்கள் ராஜினாமா செய்ய முன்வந்திருப்பதாகவும், இதனை கட்சித் தலைமைக்குத் தெரிவித்திருப்பதாகவும் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான அஜய் மக்கேன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments