வேளாண் சட்டங்கள் ரத்து ஏன்? பிரதமர் மோடி விளக்கம்
வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் விவசாயிகளை வைத்து அரசியல் செய்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மாஹோபாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் விவசாயிகளுக்கு ரூபாய் 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய்க்கு நலத்திட்டங்களை வழங்கி உரையாடிய பிரதமர் குடும்ப அரசியல் கட்சிகள் விவசாயிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதை விரும்பவில்லை என்று கூறினார்.
அரசியல் கட்சிகள் பிரச்சினைகளை வைத்து அரசியல் பண்ணுவதாகவும் பாஜக தீர்வுகளை வைத்து அரசியல் செய்வதாகவும் மோடி கூறினார். முந்தைய ஆட்சிகளில் விவசாயிகளுக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை என்றும் தமது ஆட்சியில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ஒரு லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதாகவும் மோடி கூறினார்.
Comments