டெங்கு காய்ச்சலால் கர்ப்பிணிகளுக்கும், வயிற்றில் வளரும் சிசுவுக்கும் பாதிப்பு உண்டாகும் - மருத்துவர்கள்
டெங்கு காய்ச்சல் கர்ப்பிணிகளையோ அல்லது வயிற்றில் வளரும் சிசுவையோ பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய மகப்பேறு மருத்துவர் ஸ்மிதா வாட்ஸ், கர்ப்பிணிகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் கரு வளர்ச்சித் தடையால் பாதிக்கப்படும் சிசு எடை குறைவாகப் பிறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாச அமைப்பில் சிக்கல் ஏற்படலாம் என்றும் நரம்பியல் மற்றும் செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர் ஸ்மிதா வாட்ஸ் கூறினார். மிகவும் கடுமையான சூழ்நிலையில் முன்கூட்டியே பிரசவிக்கும் நிலையும் உண்டாகலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Comments