எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி ; மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
சட்டசபை தேர்தலில், சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில், மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளரையும் அவரது தந்தையையும், ஐதராபாத்தில் வைத்து தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட, தனது சகோதரிக்கு சீட் கேட்டு, பாஜக பிரமுகர் புவனேஷ் குமார் என்பவர், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் உதவியாளர் நரோத்தமன் என்பவரை அணுகியுள்ளார்.
அவர் ஒரு கோடி ரூபாய் கேட்டதாகவும், முதல்கட்டமாக 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், வாக்குறுதி அளித்தபடி சீட் வாங்கி தராததால், நரோத்தமன் மீது சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில், புருஷோத்தமன் புகார் அளித்தார்.
இதையடுத்து, அவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நரோத்தமன் மற்றும் அவரது தந்தையை, ஹைதாராபத்தில் கைது செய்தனர். மேலும் இருவரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments