வருகிற ஜனவரி மாதம் 20ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளிலும், நேரடி தேர்வுகள் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

0 12664

னவரி 20ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளிலும் நேரடித்தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் பொன்முடி தலைமையில் கல்லூரி மாணவர்கள், தேர்வு அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நேரடித் தேர்வு எழுத ஒரு மாதம் காலம் மாணவர்கள் அவகாசம் கேட்டதால் அவர்களின் கோரிக்கை ஏற்று ஜனவரி 20 முதல் தேர்வு நடத்த முடிவு செய்ததாக தெரிவித்தார்.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே நேரடி தேர்வுகள் நடத்தப்படுவதாக கூறிய அமைச்சர், ஒட்டுமொத்த மாணவர்களும் இம்முடிவை ஏற்றதாகவும் கூறினார்.

மேலும், நேரடித் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்றும் இந்த 2 மாதங்களில் அனைத்து பாடங்களும் எடுக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments