தனது குடும்பத்தினரை ஆளுங்கட்சியினர் தரக்குறைவாக பேசுவதாக, செய்தியாளர் சந்திப்பில் கதறி அழுத சந்திரபாபு நாயுடு

0 3248

ந்திராவின் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தன்னைப் பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக பேசுவதாக கூறி சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்கள் சந்திப்பின்போது கதறி அழுதார்.

அம்மாநிலத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமுற்ற சந்திரபாபு நாயுடு, தான் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பிடித்து முதலமைச்சரான பிறகே சட்டப்பேரவைக்குள் நுழைவேன் என தெரிவித்து அங்கிருந்து வெளியேறினார்.

இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, சட்டப்பேரவையில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக பேச முற்பட்டபோது கதறி அழுதார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments