பெண் மீது பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி தாக்க முயற்சி : வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு

0 3971

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் பெண் ஒருவர் மீது பொக்லைன் இயந்திரத்தை ஏற்றி தாக்க முயற்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் நபர் மீது அந்தப் பெண் கற்கள் மற்றும் செங்கற்களை வீசுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட நிலத் தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் இப்படி தாக்கிக் கொண்டதாக பார்மர் எஸ்.பி தீபக் பார்கவ் தெரிவித்துள்ளதோடு, சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 13 ஆம் தேதி நடந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானதன் பிறகே போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments