வெள்ளத்தில் சரிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம்.. .பதைபதைக்கும் காட்சி
திருப்பதி சுவர்ணமுகி நதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோரம் கட்டப்பட்டிருந்த குடியிருப்பு கட்டிடம், ஆற்றில் சரிந்து விழுந்தது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சானூர் பகுதியில் நதிக்கரையில் கட்டப்பட்டிருந்த மாடிவீடு, மண் அரிப்பு காரணமாக சரிந்து விழுந்தது.
முன்னெச்சரிக்கையாக வீட்டிலிருந்தவர்கள் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இதனிடையே, தாழ்வான பகுதிகளில் தங்கிருக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களுக்கு போலீசார் அப்புறப்படுத்தினர்.
Comments