தென்பெண்ணையில் வெள்ளம் - அடித்துச் செல்லப்பட்ட மயான காரியக் கொட்டகை

0 3415

விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஓடும் வெள்ளப்பெருக்கால், ஆற்றங்கரையோரம் இருந்த மயான காரியக் கொட்டகை மண் அரிப்பு ஏற்பட்டு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. புளியமரம் வேரோடு அடித்துச் செல்லப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.

சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 51ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், பம்பை ஆறு, துரிஞ்சல் ஆறுகளில் இருந்து வெளியேறும் தண்ணீராலும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பம்பை வாய்க்கால் நிரம்பி, வைலாமூர் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்து, வெள்ளக்காடாக மாறியுள்ளது.

திண்டிவனத்திலிருந்து ஒரத்தி செல்லும் சாலை, வைரபுரம் ஆற்றில் தரைப்பாலத்தின் மேலே தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கிடங்கல் ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இந்திராகாந்தி பழைய பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது.

அதேபோல், திண்டிவனம் குளத்துமேடு பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகுந்தது. மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments