வேலூரில் பொன்னை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு: குடியிருப்பு பகுதியில் இடுப்பளவுக்கு சூழ்ந்த வெள்ளம்
வேலூரில் பொன்னை ஆற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இரண்டு பிரதான பாலங்கள் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பெய்த கனமழையால், கலவகுண்டா அணையில் இருந்து வினாடிக்கு 65ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் பொண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதுதவிர, கிளை ஆறுகளில் இருந்தும் பொன்னை ஆற்றுக்கு தண்ணீர் வருவதால், பொன்னை வழியாக சென்னை செல்வோர் பயன்படுத்தக்கூடிய பாலமும், மேல்பாடியில் இருந்து பொன்னை செல்வோர் பயன்படுத்தும் தரைப்பாலமும் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கழிஞ்சூர் ஏரி நிரம்பி வெளியேறும் தண்ணீர் கோபாலகிருஷ்ணா நகர் பகுதியில், இடுப்பளவுக்கு சூழ்ந்த வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. மழைநீரோடு கழிவுநீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Comments