ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய சர்ச்சை... ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் விலகல்

0 4013

ஆபாச SMS சர்ச்சையால், ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து, டிம் பெய்ன் திடீரென விலகியுள்ளார்.

ஹோபர்ட் நகரில் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்த அவர், தனது குடும்பம் மற்றும் கிரிக்கெட் நலன் கருதி, இந்த கடுமையான முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார்.

தனது செயல் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக, ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும், டிம் பெய்ன் குறிப்பிட்டார். 2017-ல் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவருக்கு, அவர் ஆபாசமான முறையில், SMS அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments