கோவாக்ஸின், கோவிஷீல்டை 110 நாடுகள் அங்கீகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை

0 18009

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய மருந்துகளை 110 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 115 கோடி டோஸ்கள் என்ற மைல்கல்லை எட்டியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர்கள், நேற்று ஒரே நாளில் 65 லட்சம் டோஸ் போடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு விழுக்காடுக்கும் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டனர். தற்போது பெருந்தொற்றிலிருந்து மீட்பு என்பது 98 விழுக்காடுக்கும் அதிகம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments