பாஜக விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறது - முதலமைச்சர் சந்திரசேகர ராவ்
மக்களின் தேசபக்தி உணர்வுகளை பணமாக்குவது மட்டுமின்றி, மதவெறி, வகுப்புவாத மோதல்களையும் பாஜக தூண்டி விடுவதாக தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டி உள்ளார்.
அம்மாநிலத்தில் விளையும் நெல்லை மத்திய அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஹைதராபாத்தில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசும் போது, பாரதிய ஜனதா கட்சி விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டிய அவர், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் போராட்டத்தை தெலங்கானா ராஷ்டிர சமிதி முன்னின்று நடத்தும் என்று அறிவித்தார்.
Comments