சபரிமலை கோயில் பிரசாத பாக்கெட்டுக்களில் ஹலால் முத்திரை: அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாவதால் முத்திரை இருந்ததாகத் தகவல்
சபரிமலையில் வழங்கப்பட்ட பிரசாத பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை இருந்தது தொடர்பாக நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் வழங்கப்பட்ட வெல்லம் மற்றும் சவ்வரிசி பாக்கெட்டுகளில் ஹலால் முத்திரை இருந்ததையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தில் பக்தர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார்.
இதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், மகாராஷ்டிரா நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட வெல்லம் பாக்கெட்டுகள் அரபு நாடுகளுக்கு மொத்தமாக ஏற்றுமதி செய்வதால் அதில் ஹலால் முத்திரை இருந்ததாக தெரிவித்துள்ளது.
இதே நிறுவனத்திடம் சவ்வரிசி வழங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு இதுவரை 5 லட்சம் கிலோ சவ்வரிசி வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Comments