ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தொடங்கிய சிவப்பு நண்டுகளின் வலசை
ஆஸ்திரேலியாவில் சிவப்பு நண்டுகளின் வலசை தற்போது தொடங்கியுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் வருடா வருடம் சிவப்பு நண்டுகளின் வலசை நடப்பது வழக்கம்.
தீவின் ஒரு பகுதியில் இருந்து புறப்படும் நண்டுகள் மறுபுறம் உள்ள இந்தியப் பெருங்கடலுக்குச் சென்று இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இதற்காக சுமார் 5 கோடி நண்டுகள் இடம் பெயர வாய்ப்பு உள்ளதாக தீவின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வலசை செல்லும் நண்டுகள் சாலையைக் கடப்பதற்கு உதவியாக பல்வேறு இடங்களில் சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Comments