டெல்லியில் அரசின் நடவடிக்கைகளால் காற்று மாசு நிலையில் லேசான முன்னேற்றம்
டெல்லியில் இந்த வாரம் தொடக்கம் முதலே முழுவதும் மிகவும் அபாயகரமான நிலையை எட்டிய காற்று மாசு நிலை சற்று மாறத் தொடங்கியுள்ளது.
தலைநகரில் நேற்று முதல் பலத்த பனிக் காற்று வீசுவதால் ஆபத்தான நிலையில் இருந்து மிகவும் மோசமான நிலைக்கு அது முன்னேறியது.கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக காற்று நிலை 347 ஆக பதிவானது.
புதன்கிழமை இது 375 ஆக இருந்தது. பள்ளிகள் விடுமுறை, அரசு அலுவலக ஊழியர்கள் 50 சதவீதம் பேருக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவு, சரக்கு லாரிகளுக்குத் தடை, தண்ணீர் தெளித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் சிறிதளவு முன்னேற்றம் காணப்படுகிறது.
Comments