மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணுக்கு சிறை தண்டனை உறுதி!

0 4269

மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை சேர்ந்த வசந்தி என்பவர், பணத்தாசையில்15 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், அவரது தாய் உள்பட 10 பேருக்கு எதிராக, விபச்சார தடுப்பு மற்றும் போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் சிறுமியின் தாய்க்கு 10 ஆண்டுகள் சிறையும், இருவருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களை விடுதலை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து போலீஸ் தரப்பிலும், வழக்குகள் தொடரப்பட்டன.

இதில், சிறுமியின் தாய் உள்ளிட்ட இருவருக்கு, விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனையை, உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும், விடுவிக்கப்பட்ட அனைவருக்கும், 7 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்தும், உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments