தொடர் கனமழை... இரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய அரசுப் பேருந்து
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் கனமழையில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாமரைக்குளம், காணை குப்பம் பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்த நிலையில், பாத்திரங்கள் கொண்டு குடியிருப்புவாசிகள் தண்ணீரை வெளியேற்றினர்.
திண்டிவனம் மரக்காணம் சாலையில் சிறுவாடி பகுதியில் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. புதுவையில் இருந்து திருப்பதிக்குச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று, திண்டிவனம் பேருந்து நிலையம் அருகேயுள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் 8 பயணிகளுடன் சிக்கியது. ஜேசிபி இயந்திரம் மூலம் பேருந்து மீட்கப்பட்டது.
அகரம் சித்தாமூர் கிராமத்தில் பம்பை வாய்க்கால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. செஞ்சி அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், நோயாளிகள், மேல் தளத்துக்கு மாற்றப்பட்டனர்.
வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, 7 மதகுகள் வழியே 9 ஆயிரத்து 30 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Comments