மருத்துவர்கள் பொய் மருத்துவ சான்றிதழ் வழங்குவதை நிறுத்த வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

0 3942

மருத்துவர்கள் பொய் மருத்துவ சான்றிதழ் வழங்குவதை நிறுத்தாவிட்டால், மருத்துவர்கள் அளிக்கும் எந்த சான்றிதழையும் நம்ப முடியாத நிலை ஏற்படும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.

கஞ்சா வழக்கில் கைதான கோபிநாத் என்பவர் சரண் அடையாமல் இருக்க தஞ்சாவூர் மருத்துவர் பாலாஜி என்பவர் போலி மருத்துவ சான்றிதழ் வழங்கினார்.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் இவ்வாறு கூறிய  நீதிபதி, பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கும் வழக்கத்தை அடியோடு ஒழித்து,  அப்படி வழங்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்து,  எதிர்காலத்தில் மருத்துவர்கள் பொய்யான மருத்துவ சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதை  மருத்துவ கவுன்சில் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments