திருப்பதி மலைப் பாதையில் மழை வெள்ளம்... நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்திவைப்பு
திருப்பதி மலை பாதையில் மழை வெள்ளம் வழிந்தோடுவதால், பக்தர்கள் தங்கள் வாகனங்களை மிகுந்த சிரமத்துடன் ஓட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழையால், திருப்பதி மலை முழுவதும் ஆங்காங்கே ஏராளமான நீர் ஊற்றுகள் புதிதாக உருவாகியுள்ளன. மேலும், கபிலேஸ்வரர் கோயில் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது.
மலைப் பகுதியில் வசிக்கும் மான்கள், வழக்கமாக பக்தர்கள் அளிக்கும் உணவு கிடைக்காமல், சாலையோரத்தில் தவித்து வருகின்றன.
சேஷாச்சலம் மலைப்பகுதியில், திருப்பதி - கடப்பா சாலை அருகே, மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. இந்த சாலையில், வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருப்பதி சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள், முன்னேறி செல்ல முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருப்பதி - திருமலை சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
Comments