தப்பிச் சென்ற வங்கி மோசடியாளர்கள் நாடு திரும்ப வேண்டும் - பிரதமர் மோடி எச்சரிக்கை

0 3907

வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

கடன்வசதி மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து டெல்லியில் வங்கியாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் பேசிய போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். வங்கி மோசடி நடத்தி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்றவர்களை நாட்டுக்கு திருப்பி கொண்டுவர மத்திய அரசு அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தும் என மோடி கூறினார்.

பல்வேறு நடவடிக்கைகள் மூலம், வங்கி மோசடியாளர்களிடம் இருந்து இதுவரை 5 லட்சம் கோடி அளவுக்கு கடன் திரும்ப வசூலித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.  வாடிக்கையாளர்கள் எப்போது வருவார்கள் என காத்திருக்காமல், வங்கிகள் வாடிக்கையாளர்களை தேடிச் சென்று கடன் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments