பாறை துகள்களை உரமாக்கியதில் விளைச்சல் அதிகரிப்பு... ஆய்வில் தகவல்
பனிமலைப் பகுதியில் உள்ள பாறை துகள்கள் மூலம், விளைச்சல் அதிகரிப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் மெல்ல உருகிவரும் நிலையில், டென்மார்க்கில் உள்ள கோபென்ஹேகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், இது தெரியவந்துள்ளது.
கிரீன்லேண்ட் தீவின் நூக் பகுதியில் இருந்து, பாறைத் துகள்களை எடுத்து, உரம் போல் விவசாயத்திற்கு பயன்படுத்தியதில், 30 சதவீதம் மகசூல் அதிகரித்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் விளைநிலத்தின் மண்ணின் தரம் அதிகரிக்கும் என்றும், கோபென்ஹேகன் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
Comments