பூட்டானுக்கு உட்பட்ட எல்லையோர பகுதிகளில் 4 புதிய கிராமங்களை உருவாக்கிய சீனா? செயற்கைக்கோள் புகைப்படங்கள்

0 5391

சென்ற ஆண்டில் பூட்டானுக்கு உட்பட்ட எல்லையோர பகுதிகளை ஆக்கிரமித்து 4 புதிய கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

The Intel Lab-ல் ஆய்வாளாராக பணியாற்றும் நிபுணர் வெளியிட்டுள்ள செயற்கைகோள் புகைப்படங்களில், 2020 மே மாதம் தொடங்கி இதுவரை சுமார் 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதிய கிராமங்களை சீனா கட்டமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளததோடு, இந்த ஆக்கிரமிப்பு பகுதிகள், 2017-ல் சீன மற்றும் இந்திய படையினருக்கிடையே மோதல் நடந்த பகுதியான Doklam பகுதிக்கு அருகே உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பூட்டானின் வெளியுறவு கொள்கைகள் குறித்து அந்நாட்டுக்கு இந்தியா தொடர்ந்து ஆலோசனைகள் வழங்குவதுடன் அந்நாட்டு படையினருக்கு இந்தியா சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments