உத்தரப் பிரதேசம் வாரணாசியில் பறக்கும் பலூன் திருவிழா

0 2835

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் நடைபெறும் வெப்பக்காற்றுப் பலூன் திருவிழாவில்  சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

வாரணாசியில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவின் அல்புகர்க் நகரத்துடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படி கங்கையாற்றங் கரையில் மூன்று நாள் வெப்பக் காற்றுத் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் 11 பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. தொடக்கத்தில் ஆதரவற்ற சிறார்கள், கொரோனா முன்களப் பணியாளர்கள் பலூனில் தொங்கும் தொட்டியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஒருவருக்குக் கட்டணம் 500 ரூபாயாகும். ஒரு பலூனில் 5 பேர் வரை ஒரே நேரத்தில் பறக்கலாம். முக்கால் மணி நேரம் வானில் பறந்த பின் பலூன் தரையிறக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments