ஹாங்காங்: காட்டுப்பன்றிகளை பிடித்து விஷ ஊசி செலுத்திக் கொல்லும் அதிகாரிகள்
ஹாங்காங் நகரப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், நகரில் சுற்றித்திரிந்த 7 காட்டுப்பன்றிகள் பிடிக்கப்பட்டு விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்டன.
பொதுமக்கள் சிலர் காட்டுப்பன்றிகளுக்கு உணவு கொடுப்பதால் அவற்றின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்ற வாரம் ஒரு காவல் அதிகாரியை காட்டுப்பன்றி ஒன்று கடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் நிலையில், காட்டுப்பன்றிகளுக்கு உணவு கொடுப்பவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காட்டுப்பன்றிகளை பிடித்து கொல்லும் அரசின் நடவடிக்கைக்கு விலங்கு நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Comments