மயான பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது தமிழக அரசு
கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதை கௌரவிக்கும் விதமாக, மயானங்களில் பணியாற்றுவோரை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ஆணைப்படி, முன்கள பணியாளர்களின் பட்டியலில் மயான பணியாளர்கள் இல்லாவிட்டாலும், கொரோனா காலத்தில் அவர்கள் முழுமையான ஈடுபாட்டோடு பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் அயராது பணிபுரிந்து வரும் மயானப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
Comments