7,287 கிராமங்களில் 4 ஜி அலைவரிசை செல்போன் சேவைகள்! ரூ.6,466 கோடி ஒதுக்கீடு

0 2842

33 ஆயிரத்து 822 கோடி செலவில் 32 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாட்டின் தொலைதூரப்பகுதிகளில் புதிய சாலைகள் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், ஆந்திரா, சத்தீஷ்கார், ஜார்கண்ட், மராட்டியம், ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் 7 ஆயிரத்து,287 கிராமங்களில் 4-ஜி அலைவரிசை அடிப்படையில் செல்போன் சேவை வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த திட்டம், ரூ.6 ஆயிரத்து,466 கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments